×

20 ரூபாய்க்காக இட்லி கடைக்காரர் கொலை

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மீரா சாலையில் வீரேந்தர் யாதவ் என்பவர் இட்லி கடை நடத்தி வந்தார். அவர் நேற்று வழக்கம் போல் இட்லி விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரது வாடிக்கையாளரில் ஒருவர் இட்லி சாப்பிட்டுவிட்டு, அதற்கான தொகையை தருவதில் பிரச்னை ெசய்தார். அதாவது, வாடிக்கையாளர் இட்லி கடைக்காருக்கு ரூ.20 தரவேண்டும். ஆனால், அவர் அந்த தொகையை தராமல் வீரேந்தர் யாதவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒருகட்டத்தில் வீரேந்தர் யாதவை அந்த வாடிக்கையாளர் அடித்துவிட்டார். அப்ேபாது அங்கிருந்து மேலும் இரண்டு வாடிக்கையாளர்கள், தகராறு செய்த வாடிக்கையாளருக்கு ஆதரவாக வீரேந்தர் யாதவை கீழே தள்ளிவிட்டனர்.

திடீரென மயக்கமடைந்த வீரேந்தர் யாதவ், கீழே கிடந்த நிலையிலேயே இருப்பதை பார்த்து, தாக்குதல் நடத்திய 3 வாடிக்கையாளர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன் பிறகு அங்கிருந்த சிலர் வீரேந்தர் யாதவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். தகவலறிந்த மும்பை போலீசார், வீரேந்தர் யாதவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதேசமயம், மீரா சாலையைச் சேர்ந்த மூன்று பேருக்கு எதிராக போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். வெறும் ₹20 தகராறில் இட்லி கடைக்காரர் கொலையான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Italian , Idli seller killed by three customers after argument over Rs 20
× RELATED இத்தாலி ஓபன் 4வது சுற்றில் இகா